விஜய், அஜித், சூர்யா, விக்ரம் பற்றி தனுஷ் கூறியது என்ன?





தனுஷ் நடிப்பில் டிசம்பர் 18ல் வெளியாகவிருக்கும் படம் தங்கமகன். சமந்தா, எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படம் வெளியாகி ஹிட் அடித்துவருகிறது.  இதற்கு நடுவே தனுஷ் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ஸ்டார் நடிக நடிகைகளைப் பற்றியான தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார்.
விஜய், அஜித் இருவரையுமே நேசிக்கிறேன். அவர்களைப் பின்பற்றவும் செய்கிறேன். தமிழ்த் திரையுலகில் எனக்குப் பிடித்தமான டான்ஸர் விஜய். அவர் படத்தில் சிறப்புத் தேற்றத்தில் நடிக்கும் படி கேட்டால் உடனே ஓகே சொல்லிவிடுவேன்.
அஜித் கம்பீரமானவர். அவர் படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை மரியாதையாகக் கருதுவேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். மிக எளிமையானவரும் கூட.
சூர்யா கடின உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகர். மற்றவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். விக்ரமைப் பார்த்து நான் வளர்ந்தேன். அவரின் கடினமான உழைப்பு என்னை இன்றும் வியக்கவைக்கும். ஆனால் என்னை யார் ரசிகன் என்று கேட்டால், இன்றும் என்றும் நான் ரஜினி ரசிகன் தான்.
செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து எப்போ நடிக்கப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “ சீக்கிரமே நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.  வில்லன் கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்சனின் வில்லத்தனமான நடிப்பை ரசிப்பேன்.  நான் நடித்த மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பேச்சு வார்த்தை நடக்கிறது”.  நடிகைகளைப் பற்றிக் கேட்டபோது, சமந்தா திறமையான நடிகை, நயன்தாரா எல்லோரும் விரும்பும் நடிகை, ஆனால் எனக்குப் பிடித்த நடிகை குஷ்பு, சிம்ரன் தான். பிடித்த அஜித் படம் தீனா, விஜய் படம் கில்லி என்று குட்டி குட்டியாக ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டைத் தட்டினார் தனுஷ்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url