விஷாலை கோபமாக திட்டியது ஏன் விளக்குகிறார் இயக்குனர் சேரன்






நடிகர் சங்கத்தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கும் கூட்டத்தில் இயக்குனர் சேரன் சரத்குமார் அணிக்கு ஆதரவாக பேசினார். இவர் பேசும் போது விஷால், கார்த்தி இருவரின் மீதும் கடும் கோபத்தினை வெளிப்படுத்தினார்.தற்போது ஏன் அவ்வாறு அவர்களை பேசினேன் என்று சேரன் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். சரத்குமார் நேரம் காலம் பாராது எந்த நேரத்தில் உதவி கேட்டாலும் உதவினார். அதனால் தான் அவர் பக்கம் நின்று பேசினேன்.ஆனால் விஷாலிடம் தன் கதையை கூறும் போது அதற்கு வெகு நாட்கள் காக்க வைத்ததாகவும், வேறு இயக்குனரின் படம் கிடைத்ததும் தன்னை அலட்சியமாக நடத்தியதாகவும் கூறியுள்ளார்.கார்த்தியிடம் கதை சொல்ல முன்வந்த போது அதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் என்னை மூத்த கலைஞனாக மதிக்காத இவர் எப்படி மூத்த கலைஞனுக்கு கவலைப்படுவதாக தெரிவிப்பார்?இதனால் தான் அந்த மேடையில் கோவமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url