ஏ.ஆர்.ரகுமானை முந்திக்கொண்ட அவரது சிஷ்யர்






நேற்று கவிக்கோஅப்துல்ரகுமானின் பவளவிழாவும் அவர் உட்பட பல கவிஞர்கள் எழுதிய பாடல்தொகுப்பு வெளியீட்டுவிழாவும் நடைபெற்றது. அந்தப்பாடல்களுக்கு இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். அவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டார்.பாடல்தொகுப்பை அவர் வெளியிட இசையமைப்பாளர் ஜிப்ரான் பெற்றுக்கொண்டார். பாடல்தொகுப்பை வெளியிட்டுவிட்டு ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, பவளவிழாக் காணும் கவிக்கோ அவர்களுக்கு வாழ்த்துகள், அவருடைய கவிதைகளுக்கு இசைமையக்கவேண்டும் என்று எனக்கு ரொம்பநாளா ஆசை, ஆனா தாஜ்நூர் முந்திக்கொண்டார், நன்றி என்று பேச்சை முடித்துக்கொண்டார்.  தாஜ்நூர், ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரு ஆசைப்பட்டதை அவரை முந்திக்கொண்டு சிஷ்யர் செய்துவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். இது என் இசைப்பயணத்தில் மறக்கமுடியா நாள் என்று தாஜ்நூர் குறிப்பிட்டுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url