தாமதத்தைத் தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி.யில் புதிய வசதி !!


தாமதத்தைத் தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி.யில் புதிய வசதி






தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ‘டேஷ்போர்டு’ எனப்படும் புதிய  இணையவசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ‘தேர்வு முடிவுகளை விரைவாக  அறியவும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது காலதாமதத்தை தவிர்க்கவும் இந்த இணைய வசதி உதவியாக இருக்கும் என்றார்.


ஒவ்வொரு  விண்ணப்பதாரருக்கும் ஒரு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் கொடுக்கப்படும். அவர்களுக்கான இணைய பக்கத்தில் அவர்கள் தங்களது கல்வி, சாதி  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். அவர்களது பெயர், வயது, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்களும் பதிவிடப்படும்.  www.tnpsc.net என்ற ஆணையத்தின் இணையதளத்தில் இவ்வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url