Type Here to Get Search Results !

புலி படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல கதாநாயகிகள்








புலி படம் தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான முயற்சி. இப்படத்தை ஜீவா, ஜெயம் ரவி என இளம் நடிகர்கள் பாராட்டி வர, ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே பின் மனதார பாராட்டினார்.இப்படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என தொடர்ந்து திரைப்பிரபலங்கள் கூற, சமீபத்தில் சமந்தா மற்றும் தமன்னாவும் புலி படத்தை பாராட்டியுள்ளனர்.இதில் சமந்தா கூறுகையில் ‘புலி படத்தை நான் பார்க்கும்போது எனக்கு வேறொரு உலகத்தில் பயணிக்கும் அனுபவம் தந்தது, அந்தளவுக்கு கிராஃபிக்ஸ் மற்றும் பிரம்மாண்ட அரண்மனைகள் அமைந்தன. அதுமட்டுமின்றி இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் நிச்சயம் வரவேற்க்கப்படும்’ என கூறியுள்ளார்.அதே போல தமன்னா ‘ புலி படத்தை பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகளைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது, இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் புலி படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad