அமெரிக்காவில் ஆரம்பமாகும் அதிரடி: சச்சினுடன் மீண்டும் கைகோர்த்த ஷேவாக்





சச்சின், வார்னே இணைந்து நடத்தும் ஜாம்பவான்களின் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் விளையாட உள்ளார். அமெரிக்காவில் நடக்கும் இந்த Cricket All Stars T20 போட்டி எதிர்வரும் 7ம் திகதி தொடங்குகிறது. இதில் சச்சின் பிளாஸ்டர்ஸ்- வார்னே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.  இந்த தொடரில் ஏற்கனவே கங்குலி, லட்சுமணன், ரிக்கி பொண்டிங், காலிஸ், லாரா, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அதிரடி வீரர் ஷேவாக்கும் இணைந்துள்ளார். இதனை சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக சச்சின் டுவிட்டர் பக்கத்தில் , "தனது தனித்துவமான பாணியில் சிறப்பாக விளையாடும் எனது நண்பரான ஷேவாக்கை டி20 ஆல் ஸ்டார் தொடருக்கு வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url