Type Here to Get Search Results !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப்






இதுவரை செல்போன்,  வின்டோஸ் ஓஎஸ் இயங்குதளம் போன்றவற்றை விற்பனை செய்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது லேப்டாப் விற்பனையில் நுழைந்துள்ளது.  ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக "சர்பேஸ் புக்" என்ற அதிநவீன வகை சர்பேஸ் புக் லேப்டாப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக் லேப்டாப்புகளுக்கு போட்டியாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.  சில மாதங்களுக்கு முன்பு விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது  நியூயார்க்கில் முதன்முறையாக அதி நவீன லேப்டாப்பை அறிமுகப் படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இந்தியாவின் சத்தியா நாதெள்ள  பதவியேற்ற பிறகு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது, ஸ்மார்ட்போனில் கூகுளின் ஆண்ட்ராய்ட் ஆதிக்கம் செய்துவரும் நிலையில், அதற்கு போட்டியாக விண்டோஸ் இயங்கு தளத்தை கொண்டுவர தீவிர முயற்சியில் மைக்ரோசாப்ட் களம் இறங்கியுள்ளது. ஆப்பிளின் மேக் புக்கிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்டின் சர்பேஸ் புக் புதிய லேப்டாப் வெளிவந்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியில் இந்த லேப்டாப் புதிய  பரிணாமத்தை அடையும் என கணிப்பொறியளார்கள் கூறுகின்றனர்.
 'சர்பேஸ் புக்' லேப்டாப் 13.5-இன்ச் டிஸ்பிளே கொண்டதாகும். 267 பி.பி.ஐ. அளவுக்கு மிகத்துல்லியமான பிக்சர் டென்சிட்டி கொண்டதாகவும், சில்வர் உலோகத்தாலும் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது.இண்டெல் ஐ.5, ஐ.7 பிராசசர்களுடன் வெளிவரும் இந்த லேப்டாப், நல்ல கிராபிக்ஸ் திறனுடன் இயங்கும் வகையிலும், டச் ஸ்கிரீனுடனும் உள்ளது. இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்டுகளும், அனைத்துவகை மெமரி கார்டுகளையும் போடுவதற்கு பிரத்யேகமாக ஸ்லாட் ஒன்றும் தரப்பட்டுள்ளன. 700 கிராம் மட்டுமே எடை கொண்ட சர்பேஸ்புக் லேப்டாப், ஸ்கிரீனை கீ போர்டிலிருந்து தனியாக பிரித்து எடுத்துவிட்டு, டேப்லட்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் சர்பேஸ் புக் லேப்டாப், 12 மணிநேரம் வரை இயங்கும் பேட்டரி திறன் கொண்டது. ஆப்பிள் மேக்புக் ஐ விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கும் திறன் வாய்ந்தது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  வரும் 26 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது. இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். சர்பேஸ் புக் லேப்டாப்பின் தொடக்க  விலை 1499 டாலர்கள் .அதாவது இந்திய மதிப்பில் ரூ.97,757 ஆகும்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad