ரஜினி இன்று எங்கே கபாலியா, கால்பந்தா?








ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 2வது சீசன் இன்று சென்னையில் தொடங்குகிறது. தொடக்க விழாவிற்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் விருந்தினராக வரவிருக்கிறார்கள்.  இன்று முதல் நாள் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி களம் இறங்குகிறது. கொல்கத்தா அணி சென்ற ஐ.எஸ்.எல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சொந்த மண்ணில் களம் இறங்குவது சென்னை அணிக்கு பலம்.
முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கு பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யாராய், அலியா பட் ஆகியோர் நடனமாடுகின்றனர்.  அத்துடன் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் கேரளா அணியின் உரிமையாளர் சச்சின், கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரவ் கங்குலி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url