Type Here to Get Search Results !

அடி மேல் அடி வாங்கும் தோனி விலகுவாரா சாதிப்பாரா









இந்தியாவின் டெஸ்ட் அணித்தலைவராக இருக்கும் கோஹ்லியை அணித்தலைவராக நியமிக்க இயன் சேப்பல் வலியுறுத்தியுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை இழந்ததால் அணித்தலைவர் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.  இந்நிலையில் ஆஸ்திரேலியா  முன்னாள் அணித்தலைவரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன்சேப்பல், டெஸ்டுக்கும், ஒரு நாள் போட்டிக்கும் அணித்தலைவர் பதவி ஓரளவு ஒத்துப்போகும் நிலைதான் இருக்கிறது.  இதனால் டெஸ்ட் போட்டிக்கு அணித்தலைவராக பணியாற்றும் வீராட் கோஹ்லியை ஒருநாள் போட்டிக்கும் அணித்தலைவராக நியமிக்க வேண்டும். கோஹ்லியும், இந்திய அணியும் இதில் விருப்பத்துடன் இருக்க வேண்டும்.  மேலும், சிறந்த அணித்தலைவர் என்பவர் பல்வேறு பாடங்களை கற்று அதில் இருந்து வெற்றி பெறுபவர்தான் என்று கூறியுள்ளார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad