Type Here to Get Search Results !

பேங்கிங் மற்றும் பைனான்ஸ் டிப்ளமோ படிப்பு (Banking and Finance)!!


பேங்கிங் மற்றும் பைனான்ஸ் டிப்ளமோ படிப்பு (Banking and Finance)



வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டு, அதற்கு வட்டி வழங்குவதும், வட்டிக்கு கடன் வழங்குவதுமே வங்கித் தொழிலாகும். வங்கி என்பது பொது மக்களுக்காக இயங்கும் ஒரு வணிக சேவை மையமாகும். அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் உலகம் முழுவதும் இயங்கி வருகின்றன.
ஒரு நாட்டின் பணப் பரிமாற்றங்கள், உருவாக்கப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதும், வங்கி அமைப்பின் மூலமே நடைபெறுகிறது. அதுவே, தலையாய நிதி அமைப்பாகும்.
பைனான்ஸ்
பணத்தை மேலாண்மை செய்யும் ஒரு அறிவியலே பைனான்ஸ் எனப்படுகிறது. ஒரு சொத்தின் மதிப்பு மற்றும் அதிலிருந்து பெறக்கூடிய நன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில், அச்சொத்திற்கு விலை நிர்ணயித்தலை இலக்காக கொண்டுள்ளது பைனான்ஸ். பைனான்ஸ் என்பதை, பப்ளிக் பைனான்ஸ், கார்ப்பரேட் பைனான்ஸ் மற்றும் பர்சனல் பைனான்ஸ் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
மனிதனின் சுயசார்புள்ள மற்றும் உழைப்பு மிகுந்த சமூக வாழ்க்கையில், பணப் பரிமாற்றம் என்பதே ஆதாரம். பண நடவடிக்கை இல்லாமல், மனிதனின் ஒருங்கிணைந்த சமூக வாழ்க்கை சாத்தியமில்லை. முந்தைய காலத்தில், பண்டமாற்று முறை இருந்தாலும், நெடுங்காலத்திற்கு முன்பே, நாணய முறைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.
இன்றைய தாரளாமய உலகில், வங்கிகள் மற்றும் நிதிசார்ந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவம் எந்தளவிற்கானது என்பதைப் பற்றி நாம் பெரியளவில் விளக்க வேண்டியதில்லை. இத்துறைகளில், அரசுகளைவிட, தனியார்களின் பங்களிப்பும், செயல்பாடுகளும் மிக அதிகம்.
எனவே, இத்துறை வேலை வாய்ப்புகள், எப்போதும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே, பேங்கிங் மற்றும் பைனான்ஸ் துறையில் ஆர்வமுள்ளோர், அத்துறைப் படிப்பை தயங்காமல் மேற்கொள்ளலாம்.
பேங்கிங் மற்றும் பைனான்ஸ் டிப்ளமோ
இப்படிப்பை மேற்கொள்ள, சிறந்த மற்றும் தரமான கல்வி நிறுவங்களை தேர்வுசெய்வது முக்கியம். மதுரை அருகேயுள்ள சுப்பலஷ்மி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, பேங்கிங் மற்றும் பைனான்ஸ் துறையில், டிப்ளமோ படிப்பை வழங்கி வருகிறது.
இப்படிப்பில் சேர்வதற்கான தகுதி
இப்படிப்பில் சேர, ஏதேனுமொரு பட்டப்படிப்பை  முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்போரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரி நிலையில் ஒருவரை பணியமர்த்தும் பொருட்டு, IIBS -ஆல் நடத்தப்படும் பேங்கிங் மற்றும் பைனான்ஸ் டிப்ளமோ தேர்வை, இந்திய வங்கிகள் அசோசியேஷன் அங்கீகரித்துள்ளது.
இப்படிப்பு குறித்த இதர தகவல்களை அறிந்துகொள்ள   http://www.rlinstitutes.com/slcs/dipioma_banking.php


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad