டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி







இந்திய அணி துணை தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அந்த அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  இதன் முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நேற்று இரவு நடந்தது.  இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது . இதில் ரோஹித் சர்மாவுடன் அதிரடியாக ஆடிய கோஹ்லி 43 ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 28 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச டி20 போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை குவித்தார்.  இதன் மூலம் டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  இந்தப் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு 200 ரன்களை  இலக்காக வைத்தும் 7 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.   




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url