உலகில் முதல் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்!





உலகிலேயே முதன்முறையாக ரூ.999 -க்கு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிடுகின்றன. லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆப்ஸ் களுடன் மட்டும் வெளிவருகிறது. மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் இருக்கும்.  முதல் ஒரு ஆண்டுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், 2ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.  வரும் டிசம்பர் 28-ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url