கும்பகோணம் தீ விபத்து நன்கொடை 60 லட்சம் எங்கே ? நடிகர் சங்கம் அதிரடி







கும்பகோணத்தில் பள்ளியில் நடந்த தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு நடிகர் சங்கம் சார்பில் 60 லட்சம் கொடுக்கப்பட்டது. அதன்படி நடிகர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது. கமல்ஹாசன் 12 லட்சம், விஜய், சூர்யா தலா ரூ. 5 லட்சம், நடிகர் ரஜினிகாந்த் 2 லட்சம், விவேக் ஒரு லட்சம், என மொத்தம் 60 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலானதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, தனது சார்பில் 10 லட்ச ரூபாயை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பகிர்ந்தளித்தார்.இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நலனுக்கான குழுவின் தலைவரான இன்பராஜ் இன்று செய்தியாளர்களிடம் ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். எங்களுக்காக நடிகர்களிடம் இருந்து வசூல் செய்த நிதி உதவி இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை என்றும், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் எங்கள் குழந்தைகள் பெயரில் வசூல் செய்த நிதி என்ன ஆனது என்று விசாரணை செய்து அதில் ஏதேனும் மோசடி நடந்திருந்தால் மோசடி செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url