Type Here to Get Search Results !

யூரோ 2016 : பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி அதிர்ச்சியுடன் வெளியேற்றம்!






பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை. நேற்று செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, நெதர்லாந்தின் யூரோ கனவு முடிவுக்கு வந்தது.தகுதி சுற்றில் ' ஏ ' பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி செக் குடியரசு அணியை எதிர்கொண்டது. இதே பிரிவில் இடம் பெற்றிருந்த துருக்கி அணி மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளையும் துருக்கி அணி 15 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10வது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வெற்றி பெற்று துருக்கி அணி தோல்வியடைந்தால் நெதர்லாந்து அணி யூரோவுக்கு முன்னேற வாய்ப்பிருந்தது.
ஆனால் ஆம்ஸ்டர்டாமில்  சொந்த மண்ணில் நெதர்லாந்து அணி செக்குடியரசு அணியிடம் 3- 2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. நெதர்லாந்து அணியின் முன்கள வீரர் ராபின் வான் பார்சி அடித்த ' சேம்சைட் கோல்'  நெதர்லாந்தின் யூரோ வெளியேற்றத்திற்கு வித்திட்டது. அதே வேளையில் துருக்கி அணி ஐஸ்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் துருக்கி அணி 18 புள்ளிகளுடன் யூரோ 2016 தொடருக்கு  தகுதி பெற்றது.
யூரோ 2016  கால்பந்து தொடர் அடுத்த ஜுன் 10ஆம் தேதி தொடங்கி ஜுலை 10 ஆம் தேதி வரை பிரான்சில் நடைபெறுகிறது. இதுவரை 16 அணிகள் பங்கேற்று வந்த இந்த  தொடரில் தற்போது முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதற்காக 6 அணிகள் அடங்கிய 8 பிரிவுகள் கொண்ட தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் ஒவ்வொரு பிரிவிலும்  முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் யூரோ போட்டிக்கு முன்னேற முடியும்.
இதில் 'ஏ' பிரிவில் இருந்து செக் குடியரசு 22 புள்ளிகளுடனும் ஐஸ்லாந்து 20 புள்ளிகளும் துருக்கி 18 புள்ளிகளும் பெற்று முன்னேறின. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளுடன் யூரோவில் பங்கேற்க முடியாமல் வெளியேறியது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad