Type Here to Get Search Results !

உங்கள் உயரத்திற்கு நீங்கள் பிறந்த மாதம் காரணம்? ஆராய்ச்சியில் புதிய தகவல்!








லண்டன்: உங்கள் உயரம் அதிகமாக இருக்கவோ, குறைவாக இருக்கவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் ஆரம்பக்கட்ட முடிவில் தெரிய வந்துள்ளது.  இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜான் பெர்ரி என்ற மருத்துவரின் தலைமையில் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தை கருத்தரிப்பது என்பது எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நிகழலாம்.  இதற்கு பெற்றோரின் சமூகச் சூழலோ, வயதோ, உடல் நிலையோ காரணமாக அமைவதில்லை. மாறாக குழந்தையை அடையாளப்படுத்துவதற்கு, அது பிறந்த பின் வாழும் சூழல் மட்டுமன்றி பிறக்கும் மாதமும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.  கோடைக்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான எடையுடன் பிறந்து, அதிகம் விளையாடுவது, நன்றாக உணவு உண்பது என ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே, பருவ காலத்தில் சீரான உயரமாக வளரும் என தெரியவந்துள்ளது.  குறிப்பாக கோடைக்காலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளும், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், ஆரோக்கியமாகவே இருப்பதால், பூப்படைவதும் முறையாக இருக்கும். இதற்கு மாறாக, குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும், பின்னாளில் உயரம் குறைவாகவும் இருக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.  அதிலும், அம்மாவின் வயிற்றில் குழந்தை இருக்கும்போது கோடைச் சூரியனின் மூலம் அந்தக் குழந்தைகள் விட்டமின் டி சத்தைப் பெறுகிறது. மேற்கொண்டு இந்த ஆராய்ச்சியை நடத்தும்போது இன்னும் பல புதிய தகவல்கள் தெரியவரலாம் என்று தலைமை ஆராய்ச்சியாளர் கூறி உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad