Type Here to Get Search Results !

One Side Love?? ஒரு தலை காதலா??




ஒரு தலை காதலா??





நமது நாட்டில் ஒருதலை காதல் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அதனால் அவர்களது குடும்பங்கள் நிர்கதியாகின்றன. அதை தொடர்ந்து பல்வேறுவிதமான மன உளைச்சலுக்கும், சமூக சிக்கல்களுக்கும் அந்த குடும்பங்கள் இரையாகின்றன. ஒருதலை காதலுக்காக படிப்பையும், உயிரையும் விட்டு விடுவது உச்சகட்ட அறியாமை. 

காதல் உண்மையானது என்றால், அதை நிரூபிக்க அமைதி யாக காத்திருக்கவேண்டும். நியாயமான முறையில் போராட வேண்டும். அப்படியும் ஏற்காவிட்டால் விட்டுவிட வேண்டும். பதிலுக்கு கொடூரமான செயலில் ஈடுபடக்கூடாது. ஒரு பெண் தனது காதலை ஏற்றுக்கொள்ளாதபோது, அதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொண்டு ஒதுங்கிவிடவேண்டும். 



மாறாக ‘அவள் தன்னை அலட்சியப்படுத்திவிட்டாள்’ என்று கருதும்போதுதான் அது வன்ம உணர்வை தூண்டுகிறது. அதுதான் தாழ்வுமனப்பான்மையை தோற்றுவித்து, வெறியை உருவாக்குகிறது. பெண்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக ஒருவர் தன்னிடம் பேசும்போதும், பழகும்போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். 

நட்பாக மட்டுமே இருந்தால் ஆபத்தில்லை. வேறு மாதிரியான எண்ணங்கள் மனதில் இருப்பதாக தோன்றினால், விழிப்பாகிவிடவேண்டும். ‘அதெல்லாம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று கருதாமல், ‘நீங்கள் என்னோடு நட்போடு மட்டும்தான் பழகவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்’ என்று முதலிலே கூறிவிடுங்கள். 

ஒருதலை காதல் பிரச்சினை தோன்றும்போது, ‘பெற்றோரிடம் கூறலாமா? கூடாதா?’ என்ற சிந்தனை பெண்களிடம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடம் சொல்லத்தான் வேண்டும். ஆனால் பெற்றோர் உடனே உணர்ச்சிவசப்பட்டோ, பயப்பட்டோ அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவிடக்கூடாது. மென்மையாக கையாண்டு, மகளுக்கு பாதுகாப்பும், தைரியமும் கொடுக்கும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டும். 






மாணவிகள், சக மாணவர்களுடன் எப்படி பழகவேண்டும்? பேச்சு–பழக்கத்தின் எல்லை என்ன? என்பதை எல்லாம் பாடத்திட்டம் போல் எங்கும் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களாக அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். பெற்றோர்களும் பக்குவமாக அதை மகள்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை. 

எல்லாம் தெரிந்த மகளுக்கு இதுவும் தெரியும்’ என்று விட்டுவிடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மாணவிகளுக்கு இந்த விஷயத்தில் கைகொடுப்பது ஊடகங்கள்தான். அன்றாட நாட்டு நடப்புகளை அவர்கள் பத்திரிகைகள் வாயிலாக படிக்கத் தொடங்கிவிட்டால், இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று புரிந்துகொள்வார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad