சிம்புவின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்









சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும்

தொடர்பில் இருப்பவர் சிம்பு. இவரின் வாலு படம் வெளியானதில் தற்போது

அவரது ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். அதோடு தங்களது

ஆதரவினையும் சிம்புவிற்கு தெரிவித்து வந்திருந்தனர். இந்நிலையில், சிம்பு

இனிமேல் ட்விட்டரில் தொடர போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் சிம்பு கூறியதாவது: ''இதுவரை என் ரசிகர்களும் , என்

நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி.

இன்று முதல் எனது ட்விட்டர்,எனது ரசிக மன்ற நிர்வாகிகளால்

நிர்வகிக்கப்படும்.தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை

பதிப்பேன்.ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான

படம் கொடுக்க வேண்டும் என்பது தான்.அவர்களுடனான என்னுடைய

தொடர்ப்பு வெற்றி படம் மட்டும் தான் , தவிர இதை போன்ற சமூக வலை

தளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன்.என்னுடைய

இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை''

என்று சிம்பு கூறியுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url