Type Here to Get Search Results !

தல - 56

தல - 56




அஜித் – சுருதிஹாசன் ஜோடியாக நடித்து வரும் புதிய படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அஜித்தின் 56–வது படமான இதில் அவரது தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார். கபீர்சிங் வில்லனாக வருகிறார். சிவா இயக்கும் இந்த படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை.



விநாயகர் சதுர்த்தி தினமான கடந்த 17–ந்தேதி அஜித் படத்தின் பெயர் வெளியாகும்’ என்று கூறப்பட்டது. படத்துக்கு ‘ஆரவாரம்’ என்பது உள்பட பல்வேறு பெயர்களை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றைய தினம் படத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

 விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் கமலின் ‘தூங்காவனம்’ படத்தின் ‘டிரைலர்’ வெளியிடப்பட்டது. மறுநாள் ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு தொடங்கியது. கமல்–ரஜினி படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்ததால் அஜித் படத்தின் பெயரை வெளியிடும் நிகழ்ச்சியை தள்ளி வைத்ததாக, அஜித் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் படத்தின் தலைப்பு என்ன என்பதை அறிய அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். விரைவில் பெயரை அறிவிக்க வேண்டும். இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்பது அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad