வசூல் மழையில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா











ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ், விடிவி கணேஷ் நடிப்பில் ஆதிக்

ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் த்ரிஷா இல்லன்னா

நயன்தாரா. படத்திற்கு இசை .ஜி.வி.பிரகாஷ்.

இந்தப் படம் குடும்பத்துடன் பார்ப்பது கொஞ்சம் முடியாத காரியமே. சென்சார் தரப்பு ‘ஏ’ சான்று கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்புகளைப் பெற்றுள்ளது.

49ஓ, மாயா இரண்டுமே வேறு வேறு கதைக்களம்,ஒரு படம் சமுதாய அக்கறை கொண்ட படம், மற்றொன்று பேய் படம் என்பதால் இரண்டுக்கும் இடையில் ஜாலி, காமெடி, முக்கியமாக கிளாமர் என வெளியாகி இந்தப்படம் இளசுகளை கவர்ந்திழுத்துள்ளது.

இதனையடுத்து இந்தப் படம் 4 நாட்களில் 10 கோடிகளை வசூலித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தான் தியேட்டருக்கு வரும் டார்கெட் ஆடியன்ஸ் என்பதால் இந்தப் படம் சரியாக அவர்களை இழுத்து வந்துள்ளது என்றே கூறலாம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url