ஐந்து வருடங்களுக்குப் பிறகு திரையில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்!






ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என மூன்றிலும் கலக்கியவர் ஐஸ்வர்ய ராய். 2007ல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் இவர் , திருமணதிற்கு பின்பும் தனது நடிப்பினை தொடர்ந்தார். 2010 இல் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வெளியான " எந்திரன்" இந்தியா முழுவதும் மெகா ஹிட் ஆனது, மேலும் பாலிவுட்டிலும் 3 படங்கள் அந்த வருடமே ரிலீஸ் ஆனது. அதன் பிறகு தனது குடும்ப வாழ்க்கை , குழந்தைக் காரணமாக, சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் "ஜஸ்பா" படத்தின் மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும், சில பாடல்களும், ஐஸ்வர்யா தனது நடிப்பின் திறமையை மேலும் மெருகேற்றி உள்ளார் என்பதற்கு சான்றாக இருக்கிறது.  இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ராய், சச்சின் ஜோஷி, அதுல் குல்கர்னி மற்றும் சஞ்சய் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஐஸ்வர்யா வெள்ளியாளான கோட்டா-பட்டி வேலைபாடுகள் நிறைந்த, நீல நிற நீண்ட கவுன் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நீண்ட இடைவேளைக்கு பின் வந்திருந்தாலும் ஐஸுவின் அழகில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை. ஐஸ்வர்யா இப்படத்தில் வக்கிலாக நடித்துள்ளாராம். 5 வருடங்களுக்கு பின்பு நடித்துள்ள ஐஸ்வர்யாவுடன், இர்பான் இணைந்து நடிக்க அக்ஷன் படமாக வெளிவர இருக்கும் இப்படம் அனைவரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் 2007ல் வெளிவந்த தென் கொரியன் படமான "செவன் டேஸ்' படத்தின் ரீமேக் என்பது சிறப்புச் செய்தி. சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவாகிருக்கும் இப்படம் அக்டோபர் 9ம் தேதி அன்று ரிலீஸாக இருக்கிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url