ஸ்ருதி ஹாசன் - கிராமத்தை தத்தெடுக்கிறார்..


கிராமத்தை தத்தெடுக்கிறார் -ஸ்ருதி ஹாசன்





நடிகை ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்களின் உணவு, உடை, படிப்பு, மருத்துவ செலவுகள் என அனைத்தும் ஹன்சிகாவினுடையது.



நடிகை ஸ்ருதி ஹாசன் வித்தியாசமாக இரண்டு கிராமங்களை தத்து எடுக்கிறார்.ஸ்ருதி நடித்த ஸ்ரீமந்துடு படம் பின்தங்கிய கிராமத்தை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் வருவது போல் கிராமத்தை தத்தெடுக்கும் எண்ணம் உள்ளதா என்று ட்விட்டரில் ரசிகர் கேட்ட கேள்விக்கு, ஆமாம் உள்ளது என பதிலளித்திருந்தார் ஸ்ருதி. 



சும்மா விளையாட்டுக்கு சொல்கிறார் என்று பார்த்தால், ஆந்திரா, தமிழகத்தில் தலா ஒரு கிராமத்தை தத்தெடுக்க திட்டமிட்டிருக்கிறேன் என அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்.



 
கந்தசாமி படம் வெளியான போது தாணுவும்,
 விக்ரமும் இப்படிதான் கூறினார்கள். அவர்கள் தத்து எடுத்த கிராமங்களின் கதி என்னவென்று யாருக்கும் தெரியாது. ஸ்ருதி அப்படி விட்டேத்தியாக இல்லாமல் ஹன்சிகாவின் சின்சியாரிட்டியுடன் இருப்பார் என நம்புவோம்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url