பாகுபலிக்கும் புலிக்கும் என்ன வித்தியாசம்?











அக்டோபர் ஒன்றாம்தேதி புலி படம் வெளியாகவிருக்கிறது. அதற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. அண்மையில் பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால் அதன்வெற்றியோடு புலி படத்தை ஒப்பிட்டுப்பேசுவதும் தொடருகிறது.  படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி உட்பட பலரும் புலியையும் பாகுபலியையும் ஒப்பிட்டுப்பார்க்காதீர்கள் என்கிற வேண்டுகோளை வைத்தும் அந்த ஒப்பீடு தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் இப்போது அந்தப்படத்தின் இயக்குநர் சிம்புதேவனும் ரசிகர்களுக்கு அதே கோரிக்கையை வைத்திருக்கிறார்.
நிறைய விஷூவல்எபெக்ட்ஸ் மற்றும் பீரியட் ஆகிய இரண்டுஅம்சங்கள்தாம் இவ்விரண்டுபடங்களையும் ஒப்பிட்டுப்பேச வைக்கிறது. ஆனால் எங்கள் படம் முற்றிலும் மாறுபட்டது.
இந்தப்படத்தில் போர்க்காட்சிகள் எதுவும் இல்லை, அதேசமயம், நகைச்சுவை, பாடல்கள் ஆகிய எல்லாஅம்சங்களும் முழுமையாக இருக்கும் எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்துக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url