தளபதி 59!!!


தளபதி 59



விஜய்யின் 59-வது படத்தை ‘ராஜாராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், ராதிகா, பிரபு, பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகளில் இதன் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.
 






இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடத்தி வரும் படக்குழுவினர், தற்போது தலைப்புக்கான பரிசீலனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் தீபாவளிக்கு படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 
ஒரு பண்டிகை நாளில் தலைப்பை வெளியிட்டால் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையின் பெயரில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url