Type Here to Get Search Results !

அறக்கட்டளைக்கு தன் சொத்தில் 95% பணம் கொடுத்த "பில் கேட்ஸ்" !




                                                  பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலனால் துவக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயது 40 வருடமாம். நிறுவனத்தைத் தொடங்கிய போது பில் கேட்ஸ்-ன் வயது 19. ஆலன் வயது 22 தானாம். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நேரடி ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சியாட்டில் நகருக்கு வெளியே, 80 லட்சம் சதுர அடி பரப்பளவில் தன் அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளைகள் உலகெங்கும் இயங்குகின்றன. இந்நிறுவனம் வழங்கும் சாப்ட்வேர், உலகில் பயன்படுத்தப்படும் 90% கம்ப்யூட்டர்களை இயக்குகிறது. உலகில் இயங்கும் நிறுவனங்களில் அதிக மதிப்பு கொண்டவற்றில் மூன்றாவது இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ளது. தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அன்றாட பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பில் கேட்ஸ், தொடர்ந்து அதன் தலைமை நிர்வாகியான சத்ய நாதெள்ளாவிற்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். தற்போது இவர் பில் மற்றும் மெலிண்டா பவுண்டேஷன் என்னும் அறக்கட்டளை அமைப்பின் மக்களுக்கான உதவிகளை வழங்கும் பணிகளைக் கவனித்து வருகிறார். அவருடைய தனிப்பட்ட வருமானம், அவரைக் கடந்த 21 ஆண்டுகளில் 16 முறை உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் வைத்துள்ளது.


பில் கேட்ஸ் மரணத்திற்குப் பின்னால் தன் சொத்தின் 95% பணம் தர்ம காரியங்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதுவரை இவரின் அறக்கட்டளைக்கு 2,800 கோடி டாலர் நிதி அளித்துள்ளார். ஆனால் தன் ஒவ்வொரு குழந்தைக்கும் (இரண்டு மகள், ஒரு மகன்) தலா ஒரு கோடி டாலர் மட்டுமே பில் கேட்ஸ் ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுவது ஆட்சர்யமாக உள்ளது .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad