Type Here to Get Search Results !

விஎஸ்ஓபி படத்துக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு !



                                                          சிம்பு நடிக்கும் வாலு படத்திற்கு தொடக்கம் முதல் ஆதரவு கொடுத்து வந்தது அஜித்தின் ரசிகர்கள்தான். அஜித்தின் தீவிர ரசிகராக பல வருடங்களாகவே தன்னை வெளிக்காட்டி வருபவர் சிம்பு. அதனால் அஜித் ரசிகர்களுக்கு சிம்பு மீது தனி கரிசனம் உண்டு. வாலு படத்தில் எம்ஜிஆர், ரஜினிக்குப் பிறகு அஜித்தை குறிப்பிட்டு தல புகழ்பாடும் பாடல் ஒன்றை வைத்திருக்கிறார் சிம்பு. அதுமட்டுமல்ல, இப்பாடலில் தல அஜித்தின் ஒரிஜினல் கெட்அப்பான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றி நடித்திருக்கிறார் சிம்பு. தல பற்றிய பாடல் வாலு படத்தில் இடம்பெற்றிருப்பதாலும் அவரது கெட்டப்பில் நடித்திருப்பதாலும் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் வாலு படம் மீது எதிர்பார்ப்பு உண்டாகி இருந்தது.  அதன் காரணமாக வாலு படத்துக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் வாலு படம் ரிலீஸ் ஆவதற்கு நடிகர் விஜய்  உதவிகளை செய்ததால், புலி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்புவின் அப்பாவான டி.ஆர். விஜய்யைப் புகழ்ந்து தள்ளினார். அதோடு அஜித்தை தாக்கியும் பேசினார். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் நான் விஜய்யின் ரசிகன் என்று குறிப்பிட்டிருக்கிறார் டி.ஆர்.  இதனால் சிம்பு படத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்க தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்தக்காட்சிகள் அஜித் ரசிகர்களை கடுப்பாக்கிவிட்டிருக்கிறது. வாலு படத்திற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதால் அஜித் ரசிகர்கள் விஎஸ்ஓபி படத்தைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். வாலு படத்துடன் வெளியாகும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் ரிலீஸ் ஏற்கனவே பக்காவாக திட்டமிடப்பட்டதால் அப்படத்துக்கு கூடுதல் தியேட்டர்களும், வசூல்மழை பொழியும் தியேட்டர்களும் கிடைத்துள்ளன. வரிசையாக தோல்விப்படங்களில் நடித்து பின்னடைவை வந்தித்துள்ள ஆர்யா இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad