Type Here to Get Search Results !

போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி !



வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் சமீபத்தில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்திருந்தார். வயதான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி தற்போது போலீசாக வந்து கவர இருக்கிறார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி ‘காக்க காக்க’ படத்தில் சூர்யா நடித்த அன்புச்செல்வன் மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ கமல் நடித்த ராகவன் கதாபாத்திரம் போன்று மிகவும் வலுவான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘காசேதுபதி’ என பெயர் வைத்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad