மூலிகை டீ (Rejuvenate and Tasty Herbal Tee)
                                                 
தேவையான பொருள்கள் 
 • அதிமதுரம் ---  1 டீ ஸ்பூன் 
 • சித்தரத்தை ---  1 டீ ஸ்பூன் 
 • சுக்கு ---  1 டீ ஸ்பூன் 
 • கடுக்காய் தோல் ---  2 துண்டுகள் 
 • ஏலக்காய் ---  2
 • மிளகு ---  1/4 ஸ்பூன் 
 • துளசி இலை ---  10 
 • பால் ---  3/4 கப் 
 • தேயிலைத்தூள் ---  1 டீ ஸ்பூன் 
 • சர்க்கரை ---  1 டீ ஸ்பூன் 

செய்முறை 
 • அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு, கடுக்காய்த்தோல், ஏலக்காய், மிளகு எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.1 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து இந்தப் பொடியில் 1/2 டீ ஸ்பூன் போட்டு , துளசி இலைகளுடன் கொதிக்கவிடவும். 2 நிமிடங்கள் கொதித்ததும் , தேயிலைத்தூள் சேர்த்து , அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

 • 1 நிமிடம் கழித்து வடிகட்டி சூடான பால், சர்க்கரை (அ) பனைவெல்லம் சேர்த்து அருந்தலாம். பால் சேர்க்காமலும் அருந்தலாம்.

பயன்கள் 

     ருசியான மூலிகை டீ. சுறுசுறுப்பு கிடைக்கும். மூலிகை டீ அருந்தினால் தொண்டை சளி போகும். ஜீரண சக்தி கிடைக்கும். புத்துணர்ச்சி கிடைக்கும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url