கறிவேப்பிலை துவையல்(Traditional Way)





                              கறிவேப்பிலை துவையல்(Traditional Way)
               (Curry Leaves Dish)


தேவையான பொருள்கள் 
  • கறிவேப்பிலை ---  1 கப் 
  • எண்ணெய் ---  1 ஸ்பூன் 
  • கடுகு ---  1/2 ஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு ---  1 ஸ்பூன் 
  • கடலைப்பருப்பு ---  1 ஸ்பூன் 
  • மிளகாய்வத்தல் ---  2 
  • புளி ---  நெல்லிக்காய் அளவு 
  • உப்பு ---  தேவையானது 
  • மிளகு ---  1/2 ஸ்பூன் 
  • பெருங்காயத்தூள் ---  1 சிட்டிகை 

செய்முறை 
  • கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் வறுத்து எடுக்கவும். சூடான சட்டியில் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் ஆனதும் எடுக்கவும்.

  • மிளகாய் வத்தல், வறுத்த சாமான்களை அரைக்கவும். கொரகொரப்பாக புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். 

  • காலங்காலமாக பயன்படுத்தப்பட்ட கறிவேப்பிலை துவையல் தயார்.

பயன்கள் 

         விட்டமின்கள்  நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் நாளடைவில் இரத்த சோகை குணமாகும். பசியைத் தூண்டும். சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்பை தடுத்து நிறுத்தும். சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும். தலைமுடி நன்கு வளரும். தற்காலத்திற்கு ஏற்ற அருமருந்து இந்த கறிவேப்பிலை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url