அப்துல் கலாமிற்கு பதில் கலாம் ஆசாத் : அனுஷ்காவால் பரபரப்பு !



                                                  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களும் இரங்கற் செய்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ( கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் நண்பி) அப்துல் கலாம் மறைவு குறித்து, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுஷ்கா சர்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது., ஏபிஜே கலாம் ஆசாத்தின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது டுவிட்டர் பாலோயர்கள், தவறை சுட்டிக்காட்டினர். உடனே, அந்த டுவிட்டை டெலீட் செய்த அனுஷ்கா சர்மா, அடுத்ததாக, மறுபடியும்  ஏபிஜே  கலாம் ஆசாத்திற்காக வேண்டிக்கொள்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன் என்று டுவிட் போட்டார். இந்த டுவிட்டிலும், பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதை, அவரது பாலோயர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து  ஏபிஜே அப்துல் கலாமின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று சரியாக டுவிட் செய்தார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளே, அப்துல் கலாமை பெருமைப்படுத்தியுள்ள நிலையில், கலாமின் மறைவு தினத்தில், அவரது பெயரை, இரண்டு முறை தவறுதலாக குறிப்பிட்ட பாலிவுட் நடிகையின் செயல், அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் அதிர்சசியடைய வைத்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url