Type Here to Get Search Results !

விஜய்யின் க்ளீன் இந்தியா வீடியோ கேம்





                                                        விஜய் நடித்த கத்தி மற்றும் கபார் இஸ் பேக் ஆகிய படங்களின் வீடியோ கேம்களை வடிமைத்த ஸ்கை டவ் ஸ்டூடியோ நிறுவனம் விஜய்யின் பிறந்த நாளையட்டி  விஜய் க்ளீன் இந்தியா என்ற வீடியோ கேமை இன்று வெளியிட்டுள்ளது.பொதுவாக வீடியோ கேம் ஹீரோக்கள், வில்லன்களை சுடுவார்கள், குத்துவார்கள், கார் ரேஸ், பைக் ரேஸ் போவார்கள், இந்த வீடியோ கேமின் ஹீரோ விஜய் ஓடிக்கொண்டே சாலையில் கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வார். எந்தெந்த குப்பைகளை எப்படி அழிக்க வேண்டும் என்றும் காட்டுவார்.ஸ்கை டவ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின்  முதன்மை செயல் அதிகாரி  சிவா இது பற்றி கூறியதாவது: இது விஜய் ரசிகர்களுக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்படி இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கேமில் ஐந்து நிலைகள் இருக்கும். ஒவ்வொன்றிலும்  ஈ.ஸி.மீடியம், ஹார்டு என்று அதாவது சுலபம், இடைப்பட்டது, கடினம். என்று மூன்று வகை வேகத்தில் விளையாட்டுகள் இருக்கும். விருப்பப் பட்டதைத் தேர்வு செய்து விளையாடலாம். மேலும் இந்த தூய்மைப் பணி சென்னையில் தொடங்கி கொச்சி, மும்பை, டில்லி, கோல்கட்டா என்று ஐந்து மெட்ரோ நகரங்களில் நடக்கிற மாதிரி இருக்கும்.ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதத்திலும் குப்பைகளை அகற்ற வேண்டும் உதாரணத்துக்கு கொச்சியில் ஆற்றில் உள்ள குப்பைகளை கொக்கி போட்டு அகற்ற வேண்டும்.  மும்பையில் சாலையிலுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். கோல்கட்டாவில் மேலிருந்து வந்து விழும் குப்பைகளை அகற்ற வேண்டும் இப்படி வெவ்வேறாக வடிவமைக்கப்பட்டுள்ளது." என்கிறார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad