மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் மனிஷா கொய்ராலா!





                                                        மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

                                                       ஷாமுக்கு ஜோடியாக மெல்லிய கோடு என்ற படத்தில் மனிஷா கதாநாயகியாக நடிக்கிறார். க்ரைம் கதையாக உருவாகிவரும் மெல்லிய கோடு படத்தில் ஷாம் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அர்ஜூன், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாடல் காட்சிகள் படப்பிடிப்பிற்காக துருக்கி செல்லவிருக்கிறது மெல்லிய கோடு படக்குழு.

                                                    தமிழ் மற்றும் கன்னடம் என்று இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 2011ல் தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடித்த இவர் மீண்டும் கதாநாயகியாக தமிழில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url