Type Here to Get Search Results !

காயம் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்ட போதும் காட்சிகளை முடித்து கொடுத்த அஜித்





                                                          அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனனும், வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார்கள்.

                                                          இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் அஜித் மற்றும் வில்லன் கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட அஜித்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

                                                         பின்னர் டாக்டர்கள் அஜித்தை ஓய்வு எடுக்கும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் அஜித் ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பை ரத்து செய்து ஓய்வெடுத்தால் தயாரிப்பாளருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று கூறி அஜித் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார்.

                                                         இதைப் பார்த்த படக்குழுவினர் அஜித்தின் தொழில் பக்தியை கண்டு நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். அஜித் படங்கள் என்றாலே அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது தீம் மியுஸிக் தான். இப்படத்திற்கு அனிருத் தான் இசை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இதே படத்தில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் அஸ்வின் நடித்து வருகிறார்.

                                                        இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் ‘தல படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது, சிவா ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பது போல் எடுத்து வருகிறார், படத்தின் தீம் மியுஸிக் செம்ம தெறி’ என்று கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad