காரில் இடித்தவர்களுடன் ரோட்டில் சண்டை போட்ட நடிகை நஸ்ரியா

                                        



                                 மலையாள நடிகை நஸ்ரியா நசீம்  தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ராஜா ராணி, நைய்யாண்டி,வாயை மூடி பேசவும் திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்தார்.மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் இயக்குனர் பாசிலின் மகன் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டாரின் சம்மத்ததுடன் அவர்களது திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன் பகத் பாசில் தனது அன்பு மனைவி நஸ்ரியாவுக்கு ரேஞ்ச் ரோவர்  கார் வாங்கி கொடுத்தார். நஸ்ரியா அந்த காரை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு செல்ல பயன்படுத்தி வந்தார். அதுபோல் சமீபத்தில் கொச்சிக்கு சென்று விட்டு நஸ்ரியா தனது காரில் திரும்பி கொண்டு இருந்தார்

             

                                கொச்சினுக்கு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முவட்டுபுழா என்ற இடத்தில் டிராபிக் நெறிசல்  இருந்ததால்  நஸ்ரியா காரை மெதுவாக ஓட்டி வந்து உள்ளார்.  அப்போது திடீர்  என  யாரோ ஒருவர் நஸ்ரியாவின்  காரை லேசா உரசி விட்டார். இதில் காரில் லேசாக கீறல் ஏற்பட்டு பெயிண்ட் அழிந்து விட்டது. இதில் கோபம அடைந்த நஸ்ரியா எப்படி என்னோட கார் மேல நீ உன்னோட காரக் கொண்டுவந்து உரசலாம் என்று பயங்கரமாக சண்டை போட ஆரம்பித்து விட்டார். ரோட்டில் சென்றவர்கள்  எல்லாம் நடிகை நஸ்ரியாவை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட்டது.கடைசியில் போலீஸ் வந்து நஸ்ரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url