Type Here to Get Search Results !

போலந்து அணியை பந்தாடியது இந்தியா....




                                                                 ஹாக்கி உலக லீக் அரை இறுதி தொடரின் ஆண்கள் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை அபாரமாக வென்றது. பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் போலந்து அணியுடன் நேற்று மோதியது. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. சர்தார் சிங், வால்மீகி யுவராஜ், வால்மீகி தேவிந்தர் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள இந்தியா வரும் 26ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad