Type Here to Get Search Results !

இரத்தசோகை,வெண்குட்டம், நீரிழிவு குணப்படுத்தும் கருங்காலி



     கருங்காலி(கதிரம்)
        (Acacia Catechu)


       காடுகளில் மிகுதியாக வளரும் மரமாகும். இதில் வெண்மை, கருமை என இரு வகைகள் உண்டு. வேல மரத்து இலைகளைப் போல பல இலைகள் இணைந்து காணப்படும். காம்பு பருமனாகவும், பட்டை பலவாகப் பிளந்தும், கிளைகள் பல முட்களுடனும் நிறைந்தும் காணப்படும். 

          முட்கள் சிறியவையாக வளைந்து காணப்படும். கார்ப்பருவத் துவக்கத்தில் மலரும். வெண்கருங்காலிப்பட்டை வெள்ளையாகவும், கருங்காலிப்பட்டை  கறுப்பாகவும் இருக்கும்.   

தன்மை 
    உடலுக்கு பலத்தை தரும் ரசாயனமாகும். குளுமைத் தன்மை கொண்டது. பற்களுக்கு பலம் தரக்கூடியது. கசப்பும் துவர்ப்புமான சுவை கொண்டது. இதன் அடித்தண்டு வேர், பட்டை, மலர், பிசின் மற்றும் வைரம் பாய்ந்த கட்டை மருத்துவ குணங்களைக் கொண்டது.

தீர்க்கும் நோய்கள் 
  • இருமல் மற்றும் சுவையின்மையை குணமாக்கும். உடலில் அதிகமாகச் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைக்கும். தோள்களில் ஏற்படும் அரிப்பு, விரணம் மற்றும் வெண்குட்டத்தை குணமாக்கும். நீரிழிவுக்கு நல்ல துணை மருந்தாக பயன்படும். வயிற்றிலுள்ள கிருமிநோய்களை வெளித்தள்ளி, செரிமானத்தை பலப்படுத்தும். அசீரணம் குணமாகும்.

  • காய்ச்சல்(Anti-Pyritic) குணமாகும். பித்தம், இரத்ததோஷம், இரத்தசோகை ,குட்டம் மற்றும் கபம் இவற்றைப் போக்கும். கசப்பும், துவர்ப்பும் இருப்பதால் இரத்தத்தை நன்கு சுத்தப்படுத்தும். தற்காலத்திற்கு ஏற்ற ஓர் அருமருந்தாகும்.


உபயோகமாக இருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad