Type Here to Get Search Results !

இலங்கை 300 ரன்னில் ஆல் அவுட் : பாகிஸ்தான் திணறல்





                                                                  இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து திணறி வருகிறது. காலே, சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக முழுவதுமாக ரத்தானது. இரண்டாம் நாளில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. களம் ஈரமாக இருந்ததால், தாமதமாகத் தொடங்கிய ஆட்டத்தில் மொத்தம் 64 ஓவர்களே வீசப்பட்ட நிலையில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்திருந்தது. கருணரத்னே 21, சங்கக்கரா 50, திரிமன்னே 8 ரன்னில் வெளியேறினர். கவுஷல் சில்வா 80, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 10 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

                                                                 இந்த நிலையில், நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 300 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக விளையாடிய கவுஷல் சில்வா 125 ரன் (300 பந்து, 16 பவுண்டரி) விளாச, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். மேத்யூஸ் 19, சண்டிமால் 23, விதாங்கே 18, தில்ருவன் 15 ரன்னில் ஆட்டமிழந்தனர்.




                                                             பாகிஸ்தான்  பந்துவீச்சில் வகாப் ரியாஸ், ஸுல்பிகார் பாபர் தலா 3, யாசிர் ஷா, ஹபீஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து திணறி வருகிறது. ஹபீஸ் 2, ஷெஷாத் 9, அசார் அலி 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, அனுபவ வீரர் யூனிஸ் கான் 47, கேப்டன் மிஸ்பா 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆசாத் ஷபிக் 14, சர்பராஸ் அகமது 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.                



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad