Fast and Furious 7 வசூலை கேட்டால் உங்களுக்கே தலை சுற்றி போகும்!




                               ஹாலிவுட் படத்திற்கு எப்போதும் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பால் வாக்கர் மரணம், அதிரடி சாகச சண்டைக்காட்சிகள் என பல எதிர்ப்பார்ப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் fast and furious 7.இப்படத்தில் வின் டீசல், டுவேன் ஜான்ஸன்(ராக்), பால் வாக்கர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் இந்தியாவில் மட்டும் தற்போது வரை ரூ 100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.உலகம் முழுவதும் 17 நாட்களில் கிட்டத்தட்ட ரூ 1 பில்லியன் வசூல் ஈட்டியுள்ளது. இந்திய மதிப்பின் படி ரூ 6250 கோடியாம். இதற்கு முன் அவதார் திரைப்படம் இந்த வசூலை 19 நாட்களில் வசூல் செய்தது.ஆனால், அவதார் 17500 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை fast and furious 7 முறியடிக்க முடியாது என்றாலும், உலக அளவில் வசூலில் 3 வது இடத்திற்கு வரும் என கூறப்படுகிறது
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url