Type Here to Get Search Results !

மூலிகைச்சாறு தயாரிப்பது எப்படி?












             சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது.இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் பயன் கிடைக்கும். பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மலைவேம்பு இலைச்சாறு: புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

நிலவேம்பு குடிநீர்: நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்துவிடும்.இவற்றையும், குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும் இரண்டு நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad