Type Here to Get Search Results !

8 நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து ரொனால்டோ சாதனை




















             2014-ம் ஆண்டில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் வீரரான அவர் இந்த உலகின் சிறந்த வீரர் விருதை மீண்டும் தக்க வைத்து உள்ளார். அர்ஜென்டினாவின் லியோனல் மெர்சி 4 முறை உலகின் சிறந்த வீரராக தேர்வு பெற்று இருக்கிறார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போட்டியில்  ரியல் மாட்ரிட் அணி கிரனாடா சிஎப் அணியை எதிர்கொண்டது. இதில் அதிரடியாக விளையாடிய ரியல் மாட்ரிட் 9-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரொனால்டோ 5 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் 8 நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்தார்.

இப்போட்டியின்  25-வது நிமிடத்தில் மாட்ரிட் அணி வீரர் கரேத் முதல் கோல் அடித்தார். 30-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். தொடர்ந்து பந்தை தன் வசம் வைத்திருந்த ரொனால்டோ 36- வது நிமிடத்தில் 2-வது கோல் அடித்தார்.

மீண்டும் 38-வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 30 முதல் 38 நிமிட நேரத்தில் அவர் தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து மாட்ரிட் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

முதல் பாதியில் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி நேரத்திலும் ரியல் மாட்ரிட் அணியின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. அந்த அணி வீரர் கரீம் பென்சிமா 52-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் கிரனாடா அணி வீரர்கள் நிலை குலைந்தனர்.

அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 54-வது நிமிடத்தில் ரொனால்டோ 4 வதாக ஒரு கோல் அடித்தார். அடுத்து 2 நிமிடத்தில் பென்சிமா ஒரு கோல் அடித்தார். இதனால் மாட்ரிட் அணியின் கோல் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. பதில் கோல் அடிக்கும் கிரனாடா அணியின் கடும் முயற்சிக்கு 74-வது நிமிடத்தில் தான் பலன் கிடைத்தது. அப்போது கிரனாடா அணி வீரர் எபனேஸ் கெஸ்ட்ரோ தங்கள் அணிக்கான ஒரே ஒரு கோலை அடித்தார்.

எனினும் மாட்ரிட் அணியின் தாக்குதல் தொடர்ந்தது. 83 நிமிடத்தில் மேலும் ஒரு கோல் கிடைத்தது. 89-வது நிமிடத்தில் ரொனால்டோ இப்போட்டில் தனது 5-வது கோலை அடித்தார். இறுதியில் 9-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. ஒரே போட்டியில் ரொனால்டோ 5 கோல் அடிப்பது இதுவே முதல்முறை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad