ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்
ஆப்பிள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒரு அற்புதமான பழமாகும். ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது. தற்போது இந்தியா, சீனா, அர்ஜென்டினா மற்றும் மத்திய ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நம்நாட்டில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் உள்ளன. எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கும் ஆப்பிள், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடியது. விலை சற்று அதிகம் என்றாலும் மருத்துவத்தில் இதன் பயன் அதிகரித்துள்ளது. சத்துக்கள்: ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன. பயன்கள்: ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக