சர்வரோக நிவாரணி உலர் திராட்சை!
இனிக்கும் பழங்களில் ஒன்று திராட்சை. இதில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசு பழம் என்பார்கள். யுனானி வைத்தியத்தில் இந்த கிசுமுசு பழம் சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்பு சத்தும் அதிகம் நிறைந்து உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்த பழம் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழமிது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். திராட்சையில் கால்சியம், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. திராட்சை பழத்தை இரவு உணவுக்குப்பின் பத்து பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும், பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் திகழ்வார்கள். ரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக,