Type Here to Get Search Results !

தனுஷ் சிவகார்த்திகேயன் இடையே மோதலா???-சிவகார்த்திகேயன் வருவதை அறிந்து வெளியேறிய தனுஷ்



3 படத்தின்மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகிற்கு அழைத்துவந்தவர் நடிகர் தனுஷ். அதுமட்டுமல்லாமல் தனது சொந்த நிறுவனத்தில் எதிர் நீச்சல் என்ற படத்தையும் தயாரித்து சிவகார்த்திகேயனை முன்னனி இடத்திற்கும் அழைத்துவந்தார்.ஆனால் சமீப காலங்களில் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சரியான புரிதல் இல்லை என்று கூறப்படுகிறது. 
இந்நிலையில் காக்கிச் சட்டை படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் பேசும்போது, எனக்கும் தனுஷுக்கும் எந்த பிர்சனையும் இல்லை. நாங்கள் எப்போதும் நண்பர்கள் என்றார்.மேலும் அவருக்கு சில வேலை காரணமாகவே இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் நேற்று சென்னையில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ்,சிவ்கார்த்திகேயன் வருவதை அறிவித்ததும் அங்கிருந்து கிளம்பினார். இச்சம்பவம் அவர்களுக்குள் பிரச்னை இருப்பதாகவே அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியது.
மேலும் இதற்கு அடிப்படையான காரணம் சிவகார்த்திகேயன் ரூ 6 கோடி சம்பளம் கேட்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad