
பெங்களூரு : ஜெ., சொத்துக் குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை இன்று முதல் துவங்கியது. முதல் நாளில் தி.மு.,க தரப்பு கோரிக்கையையும், ஜெ., தரப்பு கோரிக்கையையும் சிறப்பு நீதிபதி குமாரசாமி நிராகரித்தார். இருப்பினும் இறுதி உத்தரவு எதுவும் போடவில்லை. இன்று மாலைக்குள்ளோ அல்லது நாளையோ முறையான உத்தரவை பிறப்பிப்பார் என தெரிகிறது. வழக்கின் முதல் நாளே ஜெ., தரப்பு வக்கீல் குமார் வரும் 12 ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றார். இதனையும் நீதிபதி ஏற்கவில்லை.என்ன வாய்தாவா ? யாரும் கேட்க கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வழக்கு நாள்தோறும் தவறாமல் நடக்கும் என்றார் நீதிபதி.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை மற்றும் அபராதத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பீல் விசாரணையை நாள்தோறும் நடத்தி காலம் தாழ்த்தாமல் விரைவில் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்பிரமணியசுவாமி ஆஜர் : இந்த சிறப்பு கோர்ட்டின் தனி அமர்வு நீதிபதியாக சி.ஆர்.குமாரசாமி நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த வாரம் குமாரசாமி லீவு போட்டதால் நீதிபதி பில்லப்பா விசாரித்தார். இன்றைய விசாரணயில் பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியசுவாமி ஆஜராகி வாதிட்டார். தி.மு.க,. பொது செயலர் அன்பழகன் சார்பில் குமரேசன் வக்கீலும், ஜெ., தரப்பில் குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் ஆஜராகினர்.
' நான்தான் இந்த வழக்கை போட்டவன் ' - நீதிபதியிடம் சாமி அறிமுகம்
சுப்பிரமணிய சுவாமி கோர்ட்டுக்கு வந்தார். அப்போது , நீங்கள் யார் என நீதிபதி குமாரசாமி கேட்டார். நான் தான் இந்த வழக்கை தொடர்ந்தவன், என்றார். அப்படியா உரிய ஆவணங்களுடன் பைல் செய்யுங்கள், பின்னர் சொல்கிறேன். அன்பழகன் தரப்பு வக்கீல் குமரேசன் தனது வாதத்தில், எங்களை கடந்த நீதிபதி குன்கா சேர்த்திருந்தார் என்று முறையிட்டார். விசாரணை கோர்ட்டுடன் உங்கள் பணி முடிந்து விட்டது. அது வேறு, இது வேறு பார்ப்போம் பார்த்து சொல்கிறேன் என்றார்.
கோர்ட்டை அரசியலாக்க வேண்டாம்: மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணை துவங்கியது. இதில் அரசு தரப்பு வக்கீல் பவானிசிங், அன்பழகன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார். சுப்பிரமணிய சுவாமி இருப்பதால் இவர் இந்த வழக்கில் தேவையில்லை என குறிப்பிட்டார். நீதிபதி குமாரசாமி பதில் அளிக்கையில, இரு தரப்பினரும் மனுவாக பதிவு செய்யுங்கள். கோர்ட்டை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம். சட்டசபை, பாராளுமன்றத்தில் அரசியல் செய்யுங்கள் என நீதிபதி கோபத்துடன் தெரிவித்தார்.
2 மணி நேரம் கூட அவகாசம் கிடையாது
ஜெ., வக்கீல் பேசுகையில், இந்த வழக்கை நாளைக்கு நடத்த வேண்டாம். 8ம் தேதிக்காவது தள்ளி வையுங்கள் என்றார். இதற்கு .,
நீதிபதி: ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் ?
வக்கீல்: டில்லியில் இருந்து சிறப்பு வக்கீலை அழைத்து வரவேண்டியுள்ளது.
நீதிபதி: நீங்களே பெரிய வக்கீல்தானே ? 2 நாள் அல்ல , 2 மணி நேரம் கூட அவகாசம் கிடையாது. சுப்ரீம் கோர்ட் 3 மாதத்திற்குள் முடிக்க சொல்லியிருக்கிறது தெரியுமல்லவா ?
வக்கீல்: 3 மாதத்திற்குள் முடித்து விடலாம்.