Type Here to Get Search Results !

பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: காசிக்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பா? சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு; மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய போலீஸ் சூப்பிரண்டு

பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு:காசிக்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பா?சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு
பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பெண் போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு இருந்திருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பெண் டாக்டர்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி வந்தார். பின்னர் பெண்களிடம் நெருக்கமாக பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டார். அதன்பிறகு ஆபாச படங்களை காட்டி மிரட்டி பெண்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதே போல சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததுடன், அவரது புகைப்படங் களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் காசியை போலீசார் கைது செய்தனர்.

கந்து வட்டி

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் காசியால் ஏராளமான பெண்கள் பாதிக் கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே காசி மீது நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அதற்குப் பதிலாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஏமாற்றி வாங்கியதாக டிராவிட் என்பவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதோடு சிறுமி உள்பட 3 பெண்கள் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் காசி மீது கந்துவட்டி வழக்கு உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வெளிநாட்டு நண்பர்

இதனையடுத்து காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காசி பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங் களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், காசியின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நண்பர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் விமான போக்குவரத்து தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு தான் அவரை குமரி மாவட்டம் அழைத்து வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் தொப்பி

இந்த நிலையில் ஏற்கனவே காசி ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் தொப்பியை தன் தலையில் அணிந்தபடியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் ஒரு பெண் காசியின் அருகில் அமர்ந்திருப்பது போன்றும் இருந்தது.

இதை வைத்து பார்க்கும் போது காசியால் பாதிக்கப்பட்ட பெண்களில், யாராவது பெண் போலீஸ் அதிகாரியாக இருப்பாரோ? அல்லது போலீஸ் அதிகாரியின் மகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளச்சந்தையில் மது விற்பனை: டாஸ்மாக் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது
தமிழகத்தில் கடந்த 7, 8-ந் தேதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடைகள் மூடப்பட்டன. அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஈரோடு திருநகர்காலனி ஜெயகோபால் வீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது பெட்டிக்கடையில் மதுவிற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பெட்டிக்கடைக்காரரான கருங்கல்பாளையத்தை சேர்ந்த கணேசனிடம் (வயது 58) போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் டாஸ்மாக் கடையின் ஊழியர்கள் உதவியுடன் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதுபற்றி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.56 ஆயிரத்து 600 மதிப்பிலான மது பாட்டில்கள் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடையின் மேற்பார்வையாளரான பவானி முத்துக்கவுண்டன்புதுரை சேர்ந்த வேலுசாமி (48), விற்பனையாளரான பவானி நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த முருகேசன் (45) ஆகியோர் சேர்ந்து கடந்த 8-ந் தேதி கடையை மூடுவதற்கு முன்பு மதுவை அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்ததும், பெட்டிக்கடையின் உரிமையாளரான கணேசனின் உதவியுடன் அவர்கள் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடை ஊழியர்களான முருகேசன், வேலுசாமி, பெட்டிக்கடைக்காரரான கணேசன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும், வேலுசாமி, முருகேசன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இளங்கோ உத்தரவிட்டு உள்ளார்.

செங்குன்றம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு
செங்குன்றத்தை அடுத்த ஆட்டத்தாங்கல் பாலமுருகன் நகர் எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த அஜித்குமார்(வயது 22), விக்ரம்(21), கர்ணா (22) ஆகிய 3 பேரும் நேற்று எடப்பாளையம் உப்பரபாளையம் சாலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அஜித்குமார் உள்பட 3 பேரையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் 3 பேரையும் வெட்டியவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் கைதானால்தான் 3 பேரையும் வெட்டியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாலமுருகன் நகர், பால கணேஷ் நகர், நாகாத்தம்மன் நகர், அம்பேத்கர் நகர், எடப்பாளையம் ஆகியவை தற்போது ரவுடிகள் தஞ்சம் அடையும் பகுதிகளாக மாறி உள்ளன. ஊரடங்கு உத்தரவு காலத்திலும் இந்த பகுதியில் தற்போது மட்டும் 2 கொலைகளும், 2 கொலை முயற்சிகளும் நடைபெற்று உள்ளன.

அதன்படி கடந்த மாதம் முதல் வாரத்தில் சோலையம்மன் நகரைச் சேர்ந்த பெயிண்டர் பாலாஜி(24) என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையத்தைச் சேர்ந்த அப்பு என்ற சாயிஷா(26) 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி மணி என்ற கஞ்சாமணி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதைதொடர்ந்து நேற்று இவர் கள் 3 பேரும் வெட்டப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய போலீஸ் சூப்பிரண்டு
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

அப்போது அப்பகுதியில் ஏராளமானோர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதனை பார்த்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது அவசியம் முக கவசம் அணிந்து பேச வேண்டும். அரசு கூறும் சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடிப்பதால் மட்டுமே கொரோனோ நோயிலிருந்து நாம் தப்ப முடியும் என பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு பயிற்சி பெறும் கபிலன் கலைச்செல்வன் என்பவர் சார்பில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் கை கழுவும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்; 12,365 வழக்குகள் பதிவு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர். 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்கு

இதேபோல் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடைகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக திறந்து வைத்திருந்தது தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை மொத்தம் 12,365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 12,551 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 5,512 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தியதாக புகார்:போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தியதால் மூதாட்டி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

தீக்குளிக்க முயற்சி

பூதப்பாண்டி இறச்சகுளம் அருள்ஞான புரத்தை சேர்ந்தவர் கிரேஸ் மீரா (வயது 70). இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கையில் மனுவும், ஒரு பையும் வைத்திருந்தார். முதலில் அவரை பார்த்தபோது மனு அளிக்க வந்தவர் போல இருந்தது.

திடீரென கிரேஸ் மீரா தான் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மனு

போலீசார் ஓடிவந்து கிரேஸ் மீரா கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். அதன் பிறகு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கிரேஸ் மீரா தீக்குளிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிரேஸ் மீரா ஒரு மனுவை போலீசாரிடம் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நான் கூலி வேலை செய்து வருகிறேன். என் கணவர் இறந்து விட்டார். எனக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தற்போது நான் என் கணவரின் குடும்ப சொத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன். என்னுடன், என்னுடைய 4-வது மகன், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் என் மகனும், மருமகளும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக என்னை அடிப்பது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சாப்பாடு தராமல் பட்டினி போடுகிறார்கள். என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி கதவை அடைத்துக் கொள்கிறார்கள். இதனால் மனவேதனை அடைந்த நான் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் என் மகன் மீது 4 முறை புகார் அளித்தேன்.

ஆனால் என் மகன் போலீஸ் நிலையம் வந்து புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து விடுகிறார். அத்துடன் என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள். எனவே நான் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். இந்த நிலையில் நான் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெறும்படி போலீஸ் அதிகாரி ஒருவர் என்னை மிரட்டினார். எனவே என்னை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்த என் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பரபரப்பு

இதனையடுத்து அவரை போலீசார் சமாதானப்படுத்தி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசுமருத்துவக்கல்லூரி ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் மதனகிரியப்பா. இவரது மகன் முனிராஜ் (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளில் வந்து இறங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான முனிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து முனிராஜின் மனைவி பாக்கியா கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

முன் விரோதம்

கொலையுண்ட முனிராஜ் விவசாயம் செய்து வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு வேனும் வைத்து டிரைவர் வேலையும் செய்து வந்தார். இவருக்கு பாக்கியா என்ற மனைவியும், சந்தோஷ்குமார் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் போடிச்சிப்பள்ளியில் அரசு புறம்போக்கு பாறையில் நிலத்தில் உள்ள கல் உடைப்பது தொடர்பாக முனிராஜிக்கும், அனுமந்தபுரத்தைச் சேர்ந்த சிக்கண்ணா என்பவரின் மகன் மாதேஷ், பட்ட எல்லப்பா மகன் முனிராஜ், நாராயணப்பா மகன் மாதேஷ், அப்போஜியப்பா மகன் ஹரீஷ், ஆதி நாராயணன் மகன் சேத்தன் ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

5 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு முனிராஜ் வந்து கொண்டிருந்தார். அப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த மாதேஷ் கோஷ்டியினர் முனிராஜை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியதும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த கொலை தொடர்பாக மாதேஷ், பட்ட எல்லப்பா மகன் முனிராஜ், மற்றொரு மாதேஷ், ஹரிஷ், சேத்தன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உடலுடன் சாலை மறியல்

இந்த நிலையில் கொலையுண்ட முனிராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முனிராஜின் உடலுடன் அனுமந்தபுரம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை தங்கள் கண் முன்பு காட்டும் வரை உடலை எடுக்க மாட்டோம், என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா அங்கு விரைந்து சென்றார். குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த கொலை சம்பவம் உத்தனப்பள்ளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல்: பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது
கொரோனா தொற்றால் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ரேஷன் கடையில் வாங்கும் அரிசி, பருப்பு போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் மதுரை அண்ணாநகர் முந்திரிதோப்பு பகுதியில் உள்ள ஒரு ரேஷன்கடையில் கடந்த 12-ந்தேதி பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த ரேஷன் அரிசியை சிலர் வேன் மூலம் கடத்தினார்கள்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதைதொடர்ந்து மதுரை கூட்டுறவு பண்டகசாலை பதிவாளர், துணை பதிவாளர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதவிர உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு வந்து ரேஷன் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அதில் கடை விற்பனையாளர் காந்திமதி, எடையாளர் கரும்பாலை விஜயா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய சக்கிமங்கலம் குட்டை கண்ணன்(வயது 41), காமராஜர்புரத்தை சேர்ந்த வேன் டிரைவர் விக்னேஷ்வரன் (22), சுமைதூக்கும் தொழிலாளி மணிகண்டன் (29) மற்றும் கடை எடையாளர் விஜயா (37) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள், வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கடை விற்பானையாளர் காந்திமதி, சுமைதூக்கும் தொழிலாளி வீரபாண்டியை போலீசார் தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்:பெரம்பலூர் மாவட்ட செயலாளரின் உறவினர் உள்பட 10 பேர் மீது வழக்கு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்க்குப்பையை சேர்ந்தவர் துரை (வயது 63). இவர் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.

மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவரும், அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளருமான முத்துசாமி(60), வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவரும், மாவட்ட மீனவர் அணி செயலாளருமான முருகேசன்(50), சாத்தனவாடி ஊராட்சி கழக செயலாளர் தங்கராசு(60) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் நெய்க்குப்பையில் உள்ள துரையின் வயலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய நபர்களில் சிலர் ஆயுதங்களை கொண்டு, பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் துரை, முத்துசாமி, தங்கராசு ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். முருகேசன் மட்டும் தப்பி ஓடி விட்டார்.

அதன் பிறகு தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்து அங்கு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் ரத்த காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துரை, முத்துசாமி, தங்கராசு ஆகியோர் வி.களத்தூர் போலீசாரிடம் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரனின் அக்காள் மகன் அரணாரையை சேர்ந்த கார்த்திக், அதே ஊரை சேர்ந்த முத்துக்குமார், வக்கீல் பாலமுருகன் உள்பட 10 பேர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் கொடுத்தனர். இதையடுத்து வி.களத்தூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தால் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் உருவாகியுள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

முயல் வேட்டையாடி ‘டிக்-டாக்’ கில் பதிவேற்றம் செய்த 7 பேர் கைது
முயல் வேட்டையாடி ‘டிக்-டாக்’கில் பதிவேற்றம் செய்த 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

முயல் வேட்டை

திருச்சி வனச்சரகம் கண்ண னூர் பிரிவுக்கு உட்பட்ட காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து முயல்களை வேட் டையாட முயற்சித்த கண்ண னூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) வனத்துறையினர் கைது செய்த னர். அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல ஏவூர் அய்யம் பாளையம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், சந்துரு, சந்தோஷ், குணசேகர், பாலமுருகன், கலைச்செல்வன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் முயல்கள் வேட்டையாடி, அதை ‘டிக்- டாக்’ செயலியில் பதிவேற்றம் செய்ததாக கைது செய்யப்பட் டனர். அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டதுடன், திருச்சி மாவட்ட வனக்கோட்ட அலுவலகம் முன்பு, மறைந்த வனக்காவலர் சந்துரு நினைவாக மரக் கன்றுகளை நடவைத்தனர்.

சாராயம் காய்ச்சியவர்கள் கைது

* சாராய ஊறல் போட்டதாக ராம்ஜிநகரை சேர்ந்த 5 பேரை மதுவிலக்கு போலீசாரும், சாராயத்தை குடிப்பதற்காக வாங்கி சென்ற 2 பேரை திருச்சி கண் டோன்மெண்ட் போலீசாரும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 லிட்டர் சாராயம், 200 லிட்டர் சாராய ஊறல், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி வீனஸ் தெருவில் 15 லிட்டர் சாராயத்தை மதுவிலக்குப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதை வைத்திருந்த வர் தப்பி ஓடிவிட்டார். துறை யூர், மணப்பாறை, கல்லக்குடி, திருவெறும்பூர் மற்றும் மண் ணச்சநல்லூர் ஆகிய போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 8 வழக்குகள் பதிவு செய்து 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து 560 லிட்டர் சாராய ஊறலும், 350 லிட்டர் சாராயமும் கைபற்றப்பட்டு சம்பவ இடத்தில் அழிக்கப்பட் டது.

* தென்னூர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்றதாக காசிலிங்கத்தை(43) தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சா ரூ.150 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இளநீர் வியாபாரி தற்கொலை

* மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட் டியை சேர்ந்த இளநீர் வியா பாரி பாஸ்கர்(30) திருமணம் ஆகாத ஏக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தரகர் சாவு

* மணப்பாறையை அடுத்த ஆனாம்பட்டி பகுதியை சேர்ந்த இடைத்தரகர் ஞான வேல்(50) மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்த போது, நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறப்பு சரக்கு விமானம்

* திருச்சியில் இருந்து சரக்குகளை ஏற்றிச்செல்வதற் காக சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு சிறப்பு சரக்கு விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந் தது. இந்த விமானம் திருச்சியில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு இன்று(வெள்ளிக் கிழமை) இரவு 11 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்கிறது.

போராட்டத்துக்கு முடிவு

* பழங்கனாங்குடி கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கலெக்டரின் அறிவுரையின் பேரில், நேற்று திருச்சி ஆர்.டி.ஓ., கிராம நிர்வாக அலுவலர்கள் முன் னேற்ற சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மீண்டும் அதே கிரா மத்தில் பணி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஆர்ப்பாட்டம்

* கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், தூய்மை பணி யாளர்கள், மின்வாரிய ஊழி யர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு கருவிகள் மற்றும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவல கம் முன்பு நேற்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

கோரிக்கை மனு

* லால்குடி அருகே திரு மணமேடு ஊராட்சியில் குடி நீரை தோட்டத்திற்கு உபயோ கிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தினர் மனு கொடுத்தனர்.

வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி தந்தையுடன் கைது
காட்பாடி வஞ்சூரைச் சேர்ந்தவர் சுனில் (வயது 28). இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், விருதம்பட்டு பாலாற்றங்கரைக்கு அருகில் உள்ள சர்க்கார் தோப்புப்பகுதியில் சுனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அப்பகுதியில் வசித்த கோகிலா என்ற பெண்ணுக்கும் சுனிலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கோகிலாவும் அவரது தந்தை முத்துவும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த வழக்கில் ஆற்காட்டை சேர்ந்த டிரைவர் மணிகண்டன், காங்கேயநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோகிலாவுக்கு சுனில் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தான் கொலை செய்தோம் என மணிகண்டன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கோகிலா, முத்து ஆகியோரை காட்பாடியில் விருதம்பட்டு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad