மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன்.. கமல்ஹாசன் ஆவேசம்

மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்களை நேரடியாக சந்திக்க தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.



இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடிகர் கமல்ஹாசன் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன். நிச்சயம் நாளை நமது என்று நம்புங்கள். நான் நேசிப்பது மக்களைத்தான். எனது எஞ்சிய வாழ்வு உங்களுக்காக மட்டும்தான். மக்கள் நீதிமய்யத்தின் நகர்வு ஒவ்வொரு நாளும் வலுத்துக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url