பணத்தை திருடிவிட்டு டிரைவர் ஓட்டம் நகைச்சுவை நடிகர் ரோட்டில் தவிப்பு

காரில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு டிரைவர் தப்பியதால், நகைச்சுவை நடிகர் சாலையில் தவித்தார்.


கன்னட காமெடி நடிகர் சாது கோகிலா. இவரிடம் விஜயகுமார் என்பவர் (29) என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சாது கோகிலா கடந்த மாதம் 24-ம் தேதி தனது சகோதரி வீட்டுக்கு காரில் சென்றார். காரை விஜயக்குமார் ஓட்டி சென்றார்.

சகோதரியின் வீட்டுக்குள் சாது கோகிலா சென்றதும் காரில் இருந்த லேப்டாப், அமெரிக்க டாலர் ஆகியவற்றை விஜயகுமார் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதிர்ச்சி அடைந்த சாது கோகிலா, காரை எப்படி எடுப்பது என்று தெரியாமல் ரோட்டில் தவித்தார். பிறகு வீட்டில் இருந்த மற்றொரு சாவியை எடுத்துவந்து காரை எடுத்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விஜயகுமாரை தேடி வந்தனர். அவர் கோவாவில் ஜாலியாக இருப்பதை அறிந்த போலீசார், மடக்கிப் பிடித்து, 23 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அமெரிக்க டாலர்கள், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றினர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url