வானாகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் பாதிக்கும்: சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை
புதுடெல்லி: உலக எங்கும் இன்று இணைய தாக்குதல் நடத்தப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வானாகிரை வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் நிலைகுலைந்துள்ள நிலையில் இ-மெயில் மூலம் அது தொடர்ந்து பரவுவதால் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வானாகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேபோல் இந்திய வங்கி நிர்வாகங்குளுக்கு சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானாகிரை இணையதள வைரசை அனுப்பி விஷமிகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கணினி இணைப்புகளை முடக்கி உள்ளனர். இந்தியாவிலும் கேரள, ஆந்திரா மாநிலங்களில் வானாகிரை வைரஸ் தாக்கி உள்ளது.
வானாகிரை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி இணைய பாதுகாப்பு நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ள நிலையில் இன்று இணை தாக்குதல் நடத்துவதற்காக வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கணினிகளில் இ-மெயில்களையும் திறக்கும் போது இந்த வைரஸ் கிடுகிடுவென பரவுவதால் இதன் பாதிப்பு வரும் நாட்களில் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.