ஹீரோயின் மைய கதையில் நடிப்பது வீண் : யாரை தாக்குகிறார் தபு
சிறைச்சாலை, சிநேகிதி என பல்வேறு தமிழ் மற்றும் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் தபு. அவர் கூறியது: மாறுபட்ட கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடிப்பீர்களா என்கிறார்கள். அப்படியொரு அடையாளம் ரசிகர்களிடம் எனக்கு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் வேடங்கள் தேர்வு செய்வதில் நான் எந்த பாலிசியும் வைத்திருக்கவில்லை. என்னை கவரும் பாத்திரமாக இருந்தால் ஏற்கிறேன். ஹீரோயின் மைய கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவு எதுவும் நான் எடுக்கவில்லை.
அதுபோன்ற கதையுடன் ஒருபோதும் யாரும் என்னை அணுகியது இல்லை. மனதை தொடும் அம்சங்கள் இல்லாமல், அர்த்தமில்லாத ஹீரோயின் மைய கதையில் நடிப்பது வீண். இளம் நடிகைகள் பிரபல ஹீரோக்களுடன் ஜோடிபோட்டுக்கொண்டே மாறுபட்ட பாத்திரங்களிலும் நடிப்பதுபற்றி கேட்கின்றனர். அவர்களைப் பற்றி கருத்து சொல்ல நான் யார்? அது அவரவர் விருப்பம். எனது வளர்ச்சி எனது தகுதியை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கிறது. இவ்வாறு தபு கூறினார்.