ட்ரம்ப் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறிய விஜய் பட ஷூட்டிங்..!




விஜய் தனது 61-வது திரைப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அட்லீ தனது குழுவுடன் அமெரிக்காவுக்கு சென்றார். முக்கியமான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க முடிவுசெய்து படப்பிடிப்புக்கான லொகேஷன்களைத் தேடி அலைந்து செலக்ட் செய்தார். அதன்பின்பு அங்குள்ள லொகேஷன் மேனேஜர் வாயிலாக அந்தந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி பெறும் வேலையில் இறங்கினர்.

விஜய்


விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர். மூத்த விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு ஜோதிகாவிடம் பேசினர். முதலில் ஒப்புக்கொண்ட ஜோதிகா அதன்பின்னர் ஏனோ ‘நோ‘ சொல்லி மறுத்து விட்டார். ஜோதிகா நடிக்க இருந்த வேடத்தில் நித்யா மேனன் ஒப்பந்தமானார். இளம் விஜய்களுக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, கோவைசரளா என்று ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் நடிக்கின்றனர்.

முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு மொத்தமாக 40 நாட்கள் அமெரிக்காவிலேயே நடத்தத் திட்டம். 40 கோடி செலவில் பிரமாண்டமாய் ஒரே ஷெட்யூலில் பெரும் நட்சத்திர பட்டாளத்தோடு சென்று அமெரிக்க மண்ணில் வெவ்வேறு இடங்கில் தங்கி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களை குறிவைத்து நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் விஜய் படக்குழுவை யோசிக்கவைத்தது..

முன்பு அமெரிக்காவில்  படப்பிடிப்பு நடத்துவற்கு  அனுமதிக் கட்டணம் குறைவாக இருந்தது. ஆனால் இப்போதோ முன்பு இருந்ததைவிட பன்மடங்கு கட்டணத் தொகையை உயர்த்தி விட்டது அமெரிக்க அரசு. ஏற்கெனவே அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த யோசித்துக்கொண்டிருந்த அட்லீ படக்குழுவினர், திடீர் கட்டண உயர்வு பிரச்னையால் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தும் திட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அமைந்துள்ளது போன்ற லொகேஷன்களை ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, ஹாலந்து, போலந்து, ஜெர்மன், ஃபிரான்ஸ் போன்ற நாடிகளில் தேடி அலைந்து அந்தந்த அரசாங்கங்களிடம் அனுமதியும் பெற்றனர். அமெரிக்காவைவிட படப்பிடிப்பு கட்டணமும், நடிகர்கள், நடிகைகள், படப்பிடிப்பு குழுவினர் தங்கும் ஹோட்டலில் கட்டணமும் குறைவாக இருந்ததைக் கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சி.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url