பூனை நடை போட்டியில் ஸ்ருதி - எமி
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் 17 மற்றும் 18ம் தேதி நடக்கிறது. இதுபோன்ற விழாக்களில் பிரபல நட்சத்திரங்களுக்கு ரெட் கார்ப்பட் (சிவப்பு கம்பளவிரிப்பு) வரவேற்பு அளிக்கப்படுவதுடன் அதில் நடிகைகள் கவர்ச்சி உடைகளில் கேட்வாக் ஸ்டைலில் நடப்பது ஸ்பெஷல் அட்ராக்ஷன். முதன்முறையாக ஸ்ருதிஹாசனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வரும் 18ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் தான் நடிக்கும் ‘சங்கமித்ரா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
இதுபற்றி ஸ்ருதி கூறும்போது,’சங்கமித்ரா படத்தை சர்வதேச ரசிகர்களுக்கு இந்த விழா மூலம் அறிமுகப்படுத்துவதை பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதன் மூலம் அவர்களும் இக்கதையுடன் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்’ என்றார்.
கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவில் பங்கேற்ற எமி, இந்த ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார். சென்றமுறை பங்கேற்றபோது, இந்தோ-பிரிட்டிஷ் படமென்றில் நடிக்க எமிக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை ஆன்டி மோரஹான் இயக்குகிறார். இதன் டிரெய்லர் தற்போது நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.